seman

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில், காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்  சீமான்.

கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் ,பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.

படம் பற்றி பேசிய களஞ்சியம், “முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கையை இயல்பாக சொல்லும் படம் இது.  விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளிஎப்படிப்பட்டது என்பதும். அங்கே காதல் வயப்பட்ட இருவருக்கு  ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, அன்பரசன்  என்ற காவல் அதிகாரி அவர்களை சேர்த்துவைக்க முயற்சிப்பதுமே கதை.

படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள்40 நாட்கள்  முடிந்துள்ளது. கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துவருகிறது” என்றார்.

இந்த படத்தல் ஹீரோவாக அறிமுகமாகிறார் புகழ் என்ற இளைஞர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான சி. மகேந்திரனின் மகன்!

 

சினிமாவிலேருந்துதான் அரசியலுக்கு வரணுமா… அரசியலேர்ந்து சினிமாவுக்கு வரக்கூடாதா என்ன?