Same-Sex-Emoji-624x351
ஜகர்தா:
ஓரினச் சேர்க்கை படம் கொண்ட குறுஞ் செய்தி சின்னங்களை அகற்றுமாறு மெசேஜிங் அப்ளிகேஷன் நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வளைதளங்கள், ஐ போன்கள், வாடஸ் அப் உள்ளிட்ட மெசேஜ் அப்ளிகேஷன்கள் மூலம் குறுஞ் செய்தி சின்னங்கள் (ஐகான்ஸ்) படங்களாக அனுப்பும் வசதி உள்ளது. உடனடி பதிலுக்காக இந்த சின்னங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சின்னங்களில் பல விதமான படங்கள் இருக்கும். இதில் தான் தற்போது இந்தோனேசியாவில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சின்னங்களில் ஓரினச் சேர்க்கைகை அடையாளப்படுத்தும் காட்சிகள், சில மெசேஜிங் அப்ளிகேஷன்களில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம் அதிகம் வாழும் இந்தோனேசியாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இத்தகைய ஓரினச் சேர்க்கை சின்னங்களை மெசேஜிங் அப்ளிகேஷன் நிறுவனங்கள் அகற்ற வேண்டும் என இந்தோனேசியா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு நியூயார்கில் உள்ள ஒரினச் சேர்க்கையாளர்கள் ஆதரவு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், அரவாணிகள் ஆகியோரின் உரிமையை மதிக்கும் வகையில், இந்தோனேசியா அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் இந்த செயலை அதிபர் ஜோகோவி கண்டிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.