டில்லி

வாஜ்பாய் – அத்வானி அளவுக்கு மோடி – அமித்ஷா ஜோடி அடுத்த தலைமுறையை உருவாக்கவில்லை என”தி ப்ரிண்ட்” ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகிய இருவரும் பாஜகவை திறம்பட நடத்திச் சென்றுள்ளனர்.   அவர்கள் காலத்தில் தங்கள் அடுத்த தலைமுறை தலைவர்களாக பலரை உருவாக்கி உள்ளனர்.  தற்போது பாஜகவின் தலைமை இரட்டையர்களாக மோடி மற்றும் அமித்ஷா உள்ளனர்.  இந்த இரு ஜோடிகளையும் ஒப்பிட்டு தி ப்ரிண்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

பழம்பெரும் பாஜக தலைவர் அத்வானி ஒரு திரைப்பட பிரியர் ஆவார். அவர் “நோ கண்டிரி ஃபார் ஓல்ட் மேன்” என்னும் திரைப்படத்தை பார்த்திருப்பார்.  கடந்த 2007 ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் வில்லன்கள் கதாநாயகனை சுட்டு வீழ்த்திய போது வயதான நகர தலைவர் தற்போதைய உலகின் நியாயமற்ற தன்மையையும் யாரையும் மதிக்காத நிலையையும் எண்ணி வருந்துவார்.

அந்த திரைப்படத்தில் ஒருவரது எதிர்காலம் நாணயத்தை சுண்டி விட்டு நிர்ணயிக்கப்படும்.  தற்போது அத்வானியின் நிலையும் அவ்வாறே உள்ளது.    தர்போது மோடி மற்றும் மூத்த தலைவர்கள் பாஜகவின் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.   திரைப்படத்திஅல் நாணயம் சுண்டுவது போல் 91 வயதான அத்வானியின் எதிர்காலமும் இந்த ஆலோசனையில் அடங்கி உள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் மே மாதம் நடந்த தேர்தலில் மோடி வென்று அரசு அமைத்த பிறகே இந்த 75 வயது கட்டுப்பாடு குறித்து பேச்சு எழுந்துள்ளது.   இவ்வாறு வயது நிர்ணயம் செய்வதற்கான விதிமுறைகளை யார் கண்டறிந்தது என தெரியவில்லை.  ஆனால் இது அமித்ஷா மற்றும் மோடியின் கூட்டு யோசனை என கூறப்படுகிறது.    இந்த வயது வரம்பு விதியினால் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பல தகுதியுள்ள தலைவர்களுக்கு பதவி அளிக்கப்படவில்லை.

மோடிக்கு தற்போது 69 வயதாகிறது.  ஒருவேளை அவர் தொடர்ந்து வெற்றி பெற்றால் அவரால் 2024 ஆம் வருடம் மூன்றாம் முறையாக முழு கால கட்டத்துக்கும் பிரதமர் ஆக முடியாது.   இது அவரே கொண்டு வந்த வயது வரம்பின் விளைவாகும்.    ஆகவே 14 மாதங்கள் கழித்து மற்றொரு பிரதமரை தேர்ந்துடுக்க வேண்டி வரும்.

மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே இந்த வயது வரம்பை நிர்ணயித்துள்ளனர்.   ஆனால் அடுத்த தலைமுறையினர் யாரையும் அவர்கள் தயார் செய்யவில்லை.  அதே நேரத்தில் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் தங்களுக்கு அடுத்த தலைமுறை தலைவர்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

மிகச் சிறந்த நிர்வாகி என போற்றப்படும் அமித்ஷாவினால் ஒரு மிகச்சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.   அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்  மக்களவை தேர்தலில் போட்டியிடவர்கள்  இல்லை.    அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்கள்.   ஆகவே மக்கள் மத்தியில் இவர்கள் செல்வாக்கு குறித்து இதுவரை ஏதும் தெரியாமல் உள்ளது.

மோடி மற்றும் அமித்ஷா இணைந்து தேர்ந்தெடுத்த மகாராஷ்டிராவின் தேவேந்திர ஃபட்நாவிஸ், ஜார்க்கண்டின் ரகுபர் தாஸ், அசாமின் சர்பானத் சோனாவால், அரியானாவின் மனோகர்லால் கட்டார், திரிபுராவின் பிப்லாப் தேப் ஆகியோர் அரசியலிலும் மற்றும் நிர்வாகத் துறையிலும் பல இடங்களில் ஏமாற்றம் அளித்துள்ளனர்.   இவர்களில் நிர்வாகத் திறன் அதிகம் உள்ளவராக கூறப்படும் தேவேந்திர ஃபட்நாவிஸ் மக்களை கவரவில்லை என பாஜகவினரே தெரிவிக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அத்வானி மற்றும் வாஜ்பாய் தங்களுக்கு ஆமாம் சாமி போடும் ஆட்களை ஒதுக்கி வைத்ததே ஆகும்.  ஆனால் தற்போது மோடி மற்றும் அமித்ஷா அத்தகைய ஆட்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்து வருகின்றனர்.  இந்த நிலையை மாற்றி கடைசி தொண்டர் வரை இருவரும் தொடர்பு கொண்டு சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்கவில்லை எனில் கட்சிக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்காது

என தெரிவிக்கப்பட்டுள்ள்து.