சென்னை:

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருகிறார். அவரை வரவேற்க தமிழக முதல்வர் புறப்பட்டு சென்ற தூத்துக்கு விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி வேறு விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் அவர் கன்னியாகுமரி சென்று மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மோடி கன்னியாகுமாரி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வருகிறார். அங்கிருந்துகார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்ல இருப்பதாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த விழாவில்

மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான அதி நவீன தேஜஸ் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

ராமேஷ்வரம் – தனுஷ்கோடி இடையே 208 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்பாதை அமைக்கும்  திட்டத்துக்கு அடிக்கல்.

பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் ரயில் சேவைக்காக புதிய பாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல்,

மதுரை – ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல்

உள்பட சுமார்  40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட அதிமுக, பாஜக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி நகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.