பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா அமைப்பிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் என்னவாயிற்று என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் மெஹசனா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய ராகுல் காந்தி வருமான வரித்துறையினரின் ஆவணங்களின் படி 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் மோடிக்கு ரூ.2.5 கோடியும், 2013 நவம்பர் 12 ஆம் தேதி ரூ.5 கோடியும், 2013 நவம்பர் 27-ஆம் தேதி ரூ2.5 கோடியும் அதற்கு இரு நாட்களுக்கு பிறகு நவம்பர் 29 அன்று மேலும் ஒரு 5 கோடி ரூபாயும் தரப்பட்டுள்ளது. அது லஞ்சமாக வாங்கப்பட்ட பணம் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதுபற்றி இப்போது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. இது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை பற்றி பேசிய அவர், நோட்டுத் தடையின் நோக்கம் என்னவென்றால் ஒரு ஆறு அல்லது 7 மாதங்கள் உங்கள் பணம் முழுவதையும் வங்கிக்கு கொண்டுவருவதன் மூலம் பணக்காரர்களது கடன்களை ரத்து செய்ய ஒரு வழி இருக்கிறது. அதைத்தான் இப்போது மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உடை மாற்றுவது போல மோடி பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த நோட்டு தடையால் நன்மையடைந்தது பணக்காரர்களே! இதனால் அல்லலுறுவது ஏழை மக்கள்தான் என்று அவர் தெரிவித்தார்.
 
Modi Received ₹40 Crore From Sahara IT Dept Has Information But No Action Has Been Taken Alleges Rahul Gandhi