திருச்சி

ஃபேல் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதில் தவறு இல்லை என பாதுகாப்பு அமைசர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டம் தொடக்க விழா நடந்தது. அதில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டங்களை தொடங்கி வைத்து நிர்மலா உரையாற்றினார்.மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

நிர்மலா சீதாராமன் தனது உரையில், “திருச்சி மற்றும் சென்னையில் ஆவடிப் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களை மூட உள்ளதாக வந்துள்ள தகவல்கள் தவறானவை. அவைகளை மூடும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.  தமிழக முன்னேற்றம் குறித்து. முன்னாள் தமிழக முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா  கண்ட கனவுகளை தற்போது பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.

தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நாங்கள் உலகெங்கும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறோம். மாநில அரசுகள் அதனை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். பாஜகவுக்கு என தமிழகத்தில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கூட கிடையாது. ஆயினும் பாஜக அரசு தமிழகத்துகு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறது.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை பெண்கள் முன்னேற்றத்துக்காக ராணுவ காவல்துறையில் 20% வரை பெண்களை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமின்றி பாதுகாப்புத் துறை தமிழகத்துக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு டிஃபன்ஸ் எக்ஸ்போ மற்றும் டிஃபன்ஸ் காரிடார் திட்டத்தை வழங்கி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளித்துள்ளோம். ஒரு சிலர் அதை காதில் வாங்காமல் காகித விமானம் செய்து விட்டார்கள். ஒரு சிலர் மும்முரமாக புகைப்படம் எடுத்தனர். அப்படி இருக்க பதிலை கேட்காமல் பதிலில் திருப்தி இல்லை என எவ்வாறு சொல்லலாம்? இவ்வாறு கூறலாமா?

காங்கிரசார் நாடாலுமன்றத்தில் ஒரு பேசி விட்டு வெளியில் வேறு ஒன்றை சொல்கிறார்கள். இவ்வாறு பேசுபவர்களுக்கு பதில் அளிக்க முடியாது. ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த புரிதல் இல்லாமல் மத்திய அரசு மீது பலர் விமர்சனம் செய்கின்றனர். தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்ததாக கூறுகிறார்கள். திறமையுள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

எதிர்க்கட்சியினர் மக்களுக்கு தவறான தகவலை அளித்து நாட்டுக்கு தீங்கு விளைவிக்கின்றனர். இதன் மூலம் ஒரு கார்பரேட் போருக்கு வழி செய்கின்றனர். எதிர்க்கட்சியினருக்கு இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளதா அல்லது கார்பரேட் போரில் பங்கு கொள்வது முக்கியமாக உள்ள்தா? “ என கேள்விகள் எழுப்பி உள்ளார்