ரஜினி, விஜய்காந்த், அஜீத், விஜய், கவுண்டமணி: ஓட்டுப்போட வருவாங்களா?

நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும் என்பதோடு, குறிப்பிட்ட சில நடிகர்கள் ஓட்டுப்போட வருவார்களா என்ற சந்தேக கேள்வியும் பெரிதாக எழுந்திருக்கிறது.

இந்த சந்தேக லிஸ்டில் டாப் 5 நடிகர்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள்…?

goundamani

டாப் 5: கவுண்ட மணி இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அதே நேரத்தில் கலவர இடத்தில் அவர் இருக்க மாட்டார். இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் சர்ச்சையில் சிக்கியதே இல்லை அவர். ஆனாலும், சங்க தேர்தலில் ஓட்டுப்போடுவது ஒன்றும் அவருக்கு பிடிக்காத விசயம் இல்லைதான்.

ஆனால் தற்போது அளவுக்கு கடுமையான விமர்சனங்கள், போலீஸ் புகார்கள், அவதூறு பேச்சுக்கள் இதுவரை இருந்ததில்லை.

ஆகவே தனதுக்கு நெருக்கமானவர்களிடம், “என்னப்பா.. சங்க தேர்தல்னு சொல்லி ஒட்டுமொத்தமா பொங்க(ல்) வச்சிருவானுங்க போலிருக்கே..” என்று வருத்த்துடன் சொல்லியிருக்கிறார்.

ஆகவே ஓட்டுப்போட வருவரா என்பது சந்தேகமே.

jilla

டாப் 4: விஜய் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே சொல்கிறார்கள். சமீபத்திய “புலி” படத்தின் தோல்வியும் அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது. அதோடு அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும், “இதுலேருந்து விலகியே இருப்பா.. அதான் நல்லது” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால், “விஜய் நிச்சயம் வருவார். இந்த தேர்தல் சர்ச்சையில் அவர் சிக்காவிட்டாலும், தனது வாக்கை பதிவு செய்யவதில் உறுதியாக இருக்கிறார்” என்கிறது விஜயின் சினிமா நண்பர்கள் வட்டாரம்.

 

15-ajitha-300

டாப் 3:  அஜீத் எப்போதுமே ஒதுங்கியிருக்கிற டைப். தான் நடிக்கும் படத்தின் பிரமோஷன்களுக்கே வரமாட்டார். பாலச்சரந்தர், பாலுமகேந்திரா மறைவுக்குக் கூட வராதவர். அப்போது இவர் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததால், மனோரமா இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவ்வளவுதான்.

மேலும் தனக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்ட சமயங்களில்கூட நடிகர் சங்க உதவியை நாடாதவர். இயக்குநர் பாலாவுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட, தனது முயற்சியிலேயே அதிலிருந்து வெளியே வந்தார்.

ஆகவே அஜித் ஓட்டளிக்க வருவது சந்தேகம்தான்.   120326061854_vijayakanth-5

டாப்: 2: விஜய்காந்த், ஆரம்பத்திலிருந்தே விஷால் அணிக்கு ஆதரவு அளித்தார். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஏனென்றால், தான் ஆதரிக்கும் அணிக்கு ஆளுங்கட்சியால் பிரச்சினை ஏதும் வருமோ என்கிற முன்னெச்சரிக்கைதான். ஆனால் இன்று தனது மனதிலிருப்பதை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் வாக்களிக்க வரமாட்டார் என்கிறார்கள்.

ரஜினி வருவாரா

டாப்: 1: ரஜினி தனி வழி தனி வழி. விஷால், சரத்.. இரண்டு அணியர்களும் வந்தபோது அன்போடு வரவேற்று, புன்னகையோடு போஸ் கொடுத்தார். கூட்டம் நடத்த அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தை கேட்டபோது உடனே அனுமதித்தார். அதோடு கட்டண ரசீதையும் உடனடியாக அனுப்பி வைத்தார்.

ஆகவே இரு தரப்பினருமே ரஜினி ஆதரவு தங்களுக்குத்தான் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனால் ரஜினி பாணியே தனி. பசிச்சாலும் எதுக்க இருக்கிற பதார்த்தங்கள் கோச்சுக்கமோனு யோசிக்கிறஆள். ஆகவே ஓட்டுப்போட சென்றால், “தங்களுக்கு எதிராத்தான் போட்டிருப்பாரோ என்று இருதரப்புமோ நினைக்கமோ” என்று தயங்குகிறார்.

அதே நேரத்தில், “ஓட்டுப்போடாம இருந்தா விமர்சனம் பண்ணுவாங்க இமேஜ் பாதிக்கும்” என்று நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, வாக்களக்க வருவார். பத்தரிகையாளர்களிடம், வழக்கம்போல் பஞ்ச் டயலாக் அடித்து, தலைப்புச் செய்தி ஆவார்.

நாளை மாலை 5 மணிக்குள் இந்த டாப் 5 மனிதர்கள் வாக்களித்தார்கலா இல்லையா என்கிற ரிசல்ட் தெரிந்துவிடும்!