புதுடெல்லி:

தேசப் பாதுகாப்பு தொாடர்பான ரபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவது குற்றமில்லை என பாஜக அரசில் அங்கம் வகிக்கு் சிவசேனா தெரிவித்துள்ளது.
சிவசேனா எம்பியான சஞ்சய் ராவுத் தனியார் தாெலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அவர்களது அதிருப்தியை போக்க நாடாளுமன்றக் கூட்டக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.

 

சஞ்சய் ராவுத்

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த விசயத்தில் மாேடி அரசு கண்டும் காணாமல் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பட்ட ஒருவரின் சொத்து அல்ல. இந்த அரசில் தாெடந்தாலும், 2014-ம் ஆண்டே பாஜகவுடனான கூட்டணியை நாங்கள் முறித்துக் கொண்டோம்.
பிரெஞ்ச் அதிபர் ப்ரான்சியாஸ் ஹோலண்டன் அறிக்கையின்படி, ரபேல் போர் விமானம் வாங்க, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாக்குகளை பெறுவதற்காக ராமர் கோயில் விவகாரத்தை கையி்ல் எடுத்து மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துகள், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக அல்ல என்றார்.