பெங்களூரு:

மாபெரும் கூட்டணி அமைத்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து நாங்கள் கூட்டணி அரசு நடத்தி வருவதால், ராகு காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. மாபெரும் கூட்டணி அமைத்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்குவோம்” என்றார்.

ஏற்கெனவே, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, தேவகவுடாவும் அறிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தாலே பாஜகவை வீழ்த்திவிட முடியும் என முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.