ராமாயணத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்..

ராமாயணக்கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், தெலுங்கு இயக்குநர் ஓம் ராத்.

‘’ஆதி புருஷ்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆம். அவர் தான் ராமர் வேடத்தில் நடிக்கிறார்.

ராவணனாக , இந்தி நடிகர் சயீப் அலி கான் ,வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

3 D யில் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரபாஸ் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைப்பது இதுவே முதல் முறை.

சீதையாக நடிப்பது யார் என முடிவாகவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனத் தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

-பா.பாரதி.