டில்லி

ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் சீராய்வு மையத்தில் பதிவு செய்த பின்னரே தங்களின் நில விற்பனை, விளம்பரங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க வேண்டும் என அரசு உத்தரவு.

ரியல் எஸ்டேட் சீராய்வு மற்றும் வளர்ச்சி விதி கடந்த வருடம் இயற்றப் பட்டது.  இது மோசடி செய்யும் வியாபாரிகளை தவிர்க்கவும், நிலம் வாங்குபவர்களை ஊக்குவிக்கவும் உதவும் என அரசு சார்பில் சொல்லப்படுகிறது.  இது மே மாதம் 1 தேதி முதல் அமுலுக்கு வந்தது.

இதன் படி சீராய்வு மையம் அமைக்கப்பட்டது.

நில விற்பனைக்கு ஆரம்பமே விளம்பரம் தான் என்பது அனைவரும் அறிந்ததே.  அந்த விளம்பரம் செய்யும் முன்பு எல்லா விவரங்களையும் சீராய்வு மையத்துக்கு அளித்து அனுமதி பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஆரம்பித்துள்ள பிராஜட்டுகளுக்கு மே 1 லிருந்து மூன்று மாத அவகாசத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும், உத்தரவிட்டுள்ளது.  அதாவது வரும் ஜூலை முடிவுக்குள் அனைத்தும் இந்த மையத்தில் பதிந்தாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது வாங்குவோரின் உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் மிகவும் உதவும் என இந்த மையம் தெரிவிக்கிறது