டோக்கியோ:

புத்தாண்டையொட்டி டோக்கியோவில் நடந்த ஏலத்தில் ‘நீலத் துடுப்புச் சூரை’ மீன் உலகிலேயே அதிக விலைக்கு விற்று உலக சாதனை படைத்துள்ளது.

நீலத் துடுப்புச் சூரை மீன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அடுத்த சுக்கிஜி என்ற இடத்திலிருந்து மாற்றப்பட்ட மீன் மொத்த விற்பனை சந்தை, கடந்த ஆண்டு அக்டோபரில் டோயோசு என்ற இடத்தில் புதிதாக திறக்கப்பட்டது.
இங்கு சனிக்கிழமை நடந்த ஏலத்தில 278 கிலோ எடை கொண்ட ‘நீலத் துடுப்புச் சூரை’ என்ற அரிய வகை மீன் 3 மில்லியன் டாலருக்கு ஏலம்(ரூ.21 கோடி இந்திய மதிப்பு) போனது.
மொத்த வியாபார பிரதிநிதிகள் இது குறித்து கூறும்போது, ஜப்பான் கடற்பகுதியில் பிடிபட்ட இந்த மீன் 3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. உலகத்திலேயே இதுவே அதிக விலைக்கு விற்ற மீன் என்ற பெயர் பெறுகிறது.

ஒவ்வொரு புத்தாண்டிலும் இந்த மீன் மார்க்கெட்டில் மீன்கள் பெரிய அளவில் ஏலம் போகும். அப்போது நீலத் துடுப்புச் சூரை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும். இந்த மீன் மார்க்கெட்டை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு டீலர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் இணைந்து செயல்பட்டதே காரணம் என்றனர்.
இது குறித்து டோக்கியோ கவர்னர் யூரிக்கோ கோய்கோ கூறும்போது, அடுத்து ஜனவரி 15ம் தேதி நடக்கவுள்ள ஏலத்தைப் பார்த்து ரசிக்கும் வகையில், இந்த மீன் மார்க்கெட்டின் முதல் மாடியில் பார்வையாளர்களுக்காக புதிய இடம் திறக்கப்படவுள்ளது என்றார்.