li

லைட்ஸ் ஆப்: மகளை தூதுவிட்டு மூக்குடைபட்ட மாஜி நாட்டாமை!

ங்க கட்டிட ஒப்பந்தத்தை ஏற்கெனவே கேன்சல் செய்துவிட்டதாக மாஜி கூறியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

“இதை முன்பே சொல்லியிருக்கலாமே” என்று கேட்டதற்கு, “அப்படிச் சொல்லியிருந்தால், எதிர்தரப்பினர் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதை பிரச்சாரம் செய்வார்கள். தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஆகவே சொல்லவில்லை” என்றார் மாஜி.

ஆனால் தேர்தல் முடிந்து இவரது தோல்வி உறுதியான பிறகும், “ஒப்பந்தப்படி கட்டிடம் கட்டுவதே நல்லது” என்றவர்தான் இவர்.

ஆக, இவர் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். தவிர, அந்த நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ஏதோ ஒரு அறிக்கையை காட்டி நீக்கிவிட்டதாகக் கூறினார். ஆனால் பத்திர பதிவு அலுவலகம் மூலம், முறையாக நீக்கவி்ல்லை. ஆகவே அந்த ஒப்பந்தம் சட்டப்படி நீக்கப்படவில்லை.

சரி, “ஒப்பந்தம் நல்லது” என்றவர் அடுத்த இருபத்தினான்கு மணி நேரத்துக்குள் மாற்றிப்பேச என்ன காரணம்?

அந்த ஒரு நாளுக்குள் காதல், நட்பு, சென்ட்டிமெண்ட் என்று முழு நீள திரைப்படமே நிஜத்தில் நடந்திருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அணி, இந்த இட விவகாரத்தைக் கிளறினால் சிக்கிக்கொள்வோம் என்பது மாஜிக்கு தெரியும். ஆகவே இரு அணிக்கும் பொதுவான தயாரிப்பு ஒருவரை பிடித்து, “கட்டிட முயற்சியை தடுக்க வேண்டாம். அவர்கள் கேட்பதை தருவதாகச் சொல்லுங்கள்” என்று தூது போகச் சொல்லியிருக்கிறார். அந்த தயாரிப்போ, “அய்யோ.. இந்த விவகாரத்தில் நான் தலையிடமாட்டேன்!” என்று சொல்லியிருக்கிறார். “உமக்கு என்னென்ன உதவிகள் செஞ்சிருக்கேன்… உம்ம படம் சிக்கல்ல இருந்தப்ப நான்தானே ராத்தி முழுக்க கண்விழிச்சு பஞ்சாயத்து பேசி சரி பண்ணேன்” என்றெல்லாம் ஆதங்கமும் ஆத்திரமுமாக மாஜி சொல்ல… வேறு வழியில்லாமல் தூதுபோவதாகச் சொல்லி கிளம்பியிருக்கிறார் அந்த தயாரிப்பு.

கொஞ்சம் நிம்மதியாகி, மாஜி காத்திருக்க… இரண்டரை மணி நேரம் கழித்து வந்த மாஜி, “எதிர்தரப்பு ஒத்துக்கலை” என்று சொல்லியிருக்கிறார்.

துவண்டு போன மாஜி, வேறு வழியில் விசாரிக்க… இந்த தயாரிப்பு எதிர்தரப்பினரை சந்திக்கவே இல்லை என்பதும், தானாகவே அப்படியோர் பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பதும் மாஜிக்கு தெரியவந்தது.

ஆத்திரமான மாஜி, தயாரிப்பை பிடித்து உலுக்கி எடுத்துவிட்டாராம். தவிர, “இனியும் அந்நியரை நம்ப வேண்டாம்” என்று முடிவு செய்தவர், தனது மகளையே தூது போக சொல்லியிருக்கிறார். எதிர்தரப்பு “செயல் தலைவருக்கும்” மாஜியின் மகளுக்குமான நட்பு, ஊர் உலகத்துக்கே தெரியுமே!

ஆனால் மகள் மறுத்திருக்கிறார். “அப்பாவுக்கு பிரச்சினை ஆயிடும்மா.. நீ பேசும்மா” என்று மாஜி கண்கலங்க.. மனசு கேட்காமல் தூது போயிருக்கிறார் மகள்.

ஆனால் எதிர் தரப்பு “செயல் தலைவரோ” பட்டென்று, “நம்ம நட்பு வேற. சங்க விசயம் வேற. இதுல தலையிடாதே” என்று திருப்பி அனுப்பிவி்டடார்.

இன்னொரு பக்கம், மாஜியின் பதிபக்தி மிகுந்த திருமதி, தன்னாலான முயற்சியாக, தனது சேனல் சோர்ஸ்கள் மூலம் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதுவும் கைகூடவில்லை.

இந்த நிலையில்தான், லெட்டர் பேட் மாதிரி ஒரு கடிதத்தைக் காட்டி, “ஒரு மாதத்துக்கு முன்பே ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன்” என்றார் மாஜி.

இததான் மகளை தூதுவிட்டு மூக்குடைபட்ட மாஜியின் வரலாறு!