டாக்கா: உலகம் முழுவதும் இன்று ரமலான் தொழுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித்தழுவி தெரிவித்து வருகின்றனர்.
Bomb-blast-in-Bangladesh-One-policeman-killed_SECVPF
       வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் இறந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
       வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கிஷோர் கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை ரம்ஜான் தொழுகை நடந்து கொண்டு இருந்தது.  இதன் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும்  பல போலீஸ்காரர்களும், பொதுமக்களும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு ◌செல்லப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை ரம்ஜான் தொழுகையின் போது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்  நடைபெற்றுள்ளது அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.