Nadigar-Sangam-Press-Meet-38-740x431

க்டோபர் 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக தேர்தல் நடைபெறவிருக்கிறது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராதிகா, பாக்யராஜ், சிம்பு, ஊர்வசி உள்ளிட்ட சரத்குமார் அணியைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அனைவரும் நாம் அனைவரும் ஒரே குடும்பம். குடும்பத்திற்குள் தேவையில்லாத பிரச்சனை வேண்டாம். தயவு செய்து நடிகர் சங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசினார்கள். ஆனால் நடிகர் சிம்பு மட்டும், யாரையும் தப்பா பே சவிரும்பவில்லை என்று ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசியது முழுக்க தப்புத்தான்.

“ சரத்குமார் மீது இருக்கும் தனிப்பட்ட பகையை மனதில் வைத்து. நடிகர் சங்க பிரச்சினையை 7 கோடி மக்களிடம் கொண்டு போனது ஏன்? நடிகர் சங்கம் சார்பில் எஸ்.பி.ஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தில் என்ன தப்பு இருக்கிறதுஃ அந்த இடத்தில் திரையரங்கம் வரவேண்டாம் என்று சொல்வது ஏன்? சமரச பேச்சு வார்த்தைக்கு பூச்சி முருகன் முன்வராதது ஏன்? முருகன் போட்ட ஸ்டே ஆர்டரை வாபஸ் வாங்க சொல்லாதது ஏன்? என்று அவ்வையார் பட கே.பி. சுந்தராம்பாள் மாதிரி பல ஏன்கள் போட்டார்.

அதெல்லாம் பரவாயில்லை. அதன் பிறகு பேசியதுதான் அநாகரீகத்தின் உச்சம்.

“ சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆக விஷால் வந்த பிறகு, நான் கிரிக்கெட் விளையாடலை. கிரிக்கெட் அணியின் கேப்டன் விஷாலும் கேப்டன் விஜயகாந்தும் ஒன்றா?. உனக்கு என்ன தகுதி இருக்கிறது?. கேப்டன் என்று கூப்பிட்டதால் விஷாலுக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. நடிகர் ராதாரவி ஒரு மூத்த கலைஞர் அவர் நாய் என்று திட்டினால் என்ன தப்பு? ஆனா விஷால், நீ நாய் இல்லை… நரி மாதிரி வேலை செய்யற…” என்றெல்லாம் பேச ஆரம்பி்துவிட்டார் சிம்பு.

ஹூம்.. குழாயடி ரேஞ்சுக்கு போய்விட்டது நடிகர் சங்க தேர்தல்.