IMG-20160118-WA0001
தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைத்துள்ளது பரம்பிக்குளம் வனப்பகுதி இங்கு 1967 வருடம் தமிழக அரசால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசனதிட்டத்தின் கீழ் உள்ள பரம்பிக்குளம் அணைக்கட்டு அமைத்துள்ளது.
தமிழ்நாடு சோலையார் அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம் வந்தடைந்து அங்கிருந்து மலையை குடைந்து தூனக்கடவு மற்றும் பெருவாரி பள்ளம் அணைக்கு சென்று மீண்டும் மலையை குடைந்து சார்கார்பதி மின் உற்பத்தி நிலையம் வந்தடைந்து அங்கிருந்து ஆழியார் அணை மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் சென்றடையும். இந்த திட்டம் கோவை திருப்பூர் ஈரோடு பழனி மற்றும் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுக்கா பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை ஆண்டு முழுக்க நிறைவேற்றி வருகிறது. இந்த அணைகளின் மூலம் ஆண்டு முழுவதும் பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகள் பசுமை நிறைத்து பார்பவர்களை கவர்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் உள்ள அணைகள் அனைத்தும் தமிழக பொதுப்பணி துறையில் உள்ள நீர்வள ஆதார அமைப்பின் கட்டுபாட்டில் உள்ளது. கேரள வனப்பகுதியில் அமைத்துள்ள பரம்பிக்குளம் அணையை பராமரிக்கவும் குறித்த நேரத்தில் மற்ற அணைகளுக்கு தண்ணீர் திறத்து விடவும் தனி கோட்ட அலுவலகம் பரம்பிக்குளத்தில் செயல்பட்டு வருகிறது.
பரம்பிக்குளம் அணையில் இருந்து சுரங்க பாதை வழியாக தூனக்கடவு அணைக்கு தண்ணிர் திறந்து விட்டால் மட்டுமே தண்ணீர் தமிழகம் மற்றும் பாலக்காடு சித்தூர் தாலுக்காவிற்கு சென்றடைய முடியும். கடந்த சில மாதங்களாக கேரளா வனத்துறையினர் அதிகாரிகள் தமிழக பொது பணிதுறையினருக்கு தகுத்த ஒத்துழைப்பு தராமலும் பணி செய்ய விடாமலும் தடுத்து வருகின்றனர். இந்த திட்டம் ஆரம்பித்த காலம் முதல் தமிழ அதிகாரிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் சென்று அணையை பார்வையிடவும் தண்ணீர் திறந்து விடவும் தமிழக கேரளா அரசு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. தற்சமயம் கேரளா வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை பரம்பிக்குளம் Tunnel Entry ( தண்ணீர் செல்லும் சுரங்கம் ) செல்லும் வழியை அடைத்து அங்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனர்.
இதன் மூலம் தகுந்த சமயத்தில் தண்ணீர் திறந்து விட முடியாததால் தமிழகத்தின் 4 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு DFO ஆக பணிபுரியும் திரு.அஞ்சன்குமார் அவர்கள் மற்றும் வனக்காவலர் ரித்தீஷ் ஆகியோரின் தூண்டுதலின் பெயரிலேயே இவை நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து பரம்பிகுளத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளை அவர்கள் தரக்குறைவாக நடத்தி வருகின்றனர்