கமதாபாத்

டேல் நல இயக்கத் தலைவர் ஹர்திக் படேல் பாஜக வாக்களிப்பு இயந்திர மோசடியாலும் பண பலத்தாலும் பாஜக வென்றுள்ளதாகக் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் படேல் நல இயக்கத் தலைவர் ஹர்திக் படேல் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவித்து இருந்தார்.    அது மட்டும் இன்றி பாஜக ஏதும் மோசடி செய்யவில்லை என்றால் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.   தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்  ஹர்திக் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அவர், “வாக்களிப்பு இயந்திர மோசடியால் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள்.    குஜராத் மக்கள் பாஜகவை அடியோடு ஒழிக்க முடிவு எடுத்திருந்தனர்.    ஆனால் பாஜக தனது பண பலம் மற்றும் வாக்களிப்பு இயந்திர மோசடியால் வெற்றி எற்றுள்ளது.     அதே நேரத்தில் இது மிகவும் சாமர்த்தியமாக செய்யப்பட்டுள்ளது.    தங்களுக்கும் காங்கிரஸுக்கும் நல்ல போட்டி இருந்ததாகவும் அதையும் மீறி வென்றதாகவும் வெளி உலகுக்கு காட்டிக் கொள்ள இதுபோல சில இடங்களில் காங்கிரஸை வெற்றி பெறுமாறு பாஜக சூழ்ச்சி செய்துள்ளது.

நகர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ள பாஜக கிராமப்புற பகுதிகளில் தோல்வியுற்றதை இப்போது கவனிக்க வேண்டும்.   இனி நான் நகர்ப்புறங்களில் எனது கவனத்தை அதிகம் செலுத்துவேன்.    வராச்சா ரோட், மற்றும் காம்ரேஜ் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கில் படேல் வாக்காளர்கள் உள்ளனர்.   எனது பேரணிக்கு வந்து ஆதரவை அவர்கள் தெரிவித்தனர்.   ஆனால் அங்கெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.   இதெல்லாம் தான் மோசடி நடந்திருக்கும் என என்னை எண்ணச் செய்கிறது.

பாஜக நிச்சயமாக தவறான சூழ்ச்சிகளால் தான் வெற்றி பெற்றுள்ளது.  அப்படி பாஜக மோசடி செய்யவில்லை எனில் நிச்சயம் காங்கிரஸ் வென்றிருக்கும்.   அதே நேரத்தில் தங்கள் வெற்றியைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதாலும் சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடாது என்பதாலும் தாங்கள் 100 இடம் மட்டும் வெற்றி பெறுமாறு வாக்களிப்பு இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.