1996ல் றெக்கைகட்டி பறந்த அண்ணாமலை சைக்கிள்
1996ல் றெக்கைகட்டி பறந்த அண்ணாமலை சைக்கிள்

 
டந்த 1996-ல் வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தொடங்கப்பட்ட போது அக் கட்சி்க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது.  அச்சின்னத்தில் போட்டியிட்டு த.மா.கா. பெரு வெற்றி பெற்றது. ஆனால் அந்த சின்னத்தை வரும் சட்டசபை தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது த.மா.கா.
2002-ம் ஆண்டு, த.மா.காங்கிரஸ்,  காங்கிரஸில் இணைந்தபோது,  அக்கட்சி முறையாக கலைக்கப்படவில்லை. கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு  காங்கிரஸை விட்டு பிரிந்த வாசன் மீண்டும் த.மா.காவை துவக்கினார்.
ஏற்கெனவே கட்சியை முறையாக கலைக்காததால்,  அக்கட்சியின் பெயர் வாசனுக்கு மறுபடி  கிடைத்தது. இதே போல சைக்கிள் சின்னமும் கிடைக்கும் என வாசன் நினைத்தார். அதற்கான முயற்சியிலும் இறங்கினார். 1996ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுடன் த.மா.கா கூட்டணி வைத்திருந்தது. அக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்திருந்தார். அவர் நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் சைக்கிளில் சென்று பால் விற்பவராக ரஜினிகாந்த் தோன்றினார். அதோடு “றெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்” என்ற பாடலும் இடம் பெற்று பிரபலமானது. அந்த பாடலையும் காட்சியையும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு த.மா.காவினர் பயன்படுத்தினர். த.மா.காவின் அப்போதைய தலைவர் ஜி.கருப்பையா, சைக்கிளுடன் நின்று போஸ் கொடுத்தார். அந்த படமும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
கவலையில் வாசன்
கவலையில் வாசன்

ஆகவே மீண்டும் சைக்கிள் சின்னம் வேண்டும் எனஅறு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு வாசன் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை தமாகா.வின் சென்னை முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது.  அதில் சைக்கிள் சின்னத்தை பிராந்தியக் கட்சிகளான உ.பி.யின் சமாஜ்வாதி கட்சி, ஆந்திரா வின் தெலுங்கு தேசம் ஆகியவை பயன்படுத்தி வருவதால், த.மா.காவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
2013-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் சட்டத்தை ஆணையம் சுட்டிக்காட்டியுள் ளது. இதன்படி ஒரு கட்சி பயன்படுத்தி வரும் சின்னத்தை வேறு கட்சி பயன்படுத்த அனுமதிப்பது இல்லை என்று கூறியுள்ளது. .
தேர்தல் ஆணையத்தினஅ முடிவு வாசனை கவலை கொள்ள வைத்திருக்கிறது.    ஏனென்றால், சைக்கிள் சின்னம் ஏற்கெனவே தமிழகத்தில் பிரபலமானது. அச் சின்னத்தை பெறுவதன் மூலம் தமாகா தனது கூட்டணி பேரத்தை வலுவாக பேசி அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்று திட்டமிட்டிருந்தது.  இப்போதோ  சுயேச்சைகளை போல தமாகாவும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.  ஆகவே ஆணையத்தின் முடிவை எதிர்த்து  நீதிமன்றம் செல்ல முடியுமா என்று தனது கட்சியினருடன்  வாசன் ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையே, வரும் தமிழக தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  . தமிழகத்தில் சுமார் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.   ஆகவே த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.