b
 
விஜயகாந்த் மேல் இருக்கும பயம் காரணமாகவே அவரை அளவுக்கு மீறி சிலர் கேலி செய்கிறார்கள்”  என்று எழுத்தாளர் பாலகுமாரன் தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவு:
“இத்தனை ஏகடியம் விஜயகாந்தை நோக்கி எதற்கு? அத்தனையும் பயம்.
உங்கள் கேலி பதிவுகள் அவர் மீது ஒரு கவனத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்துகின்றன.. அவர் தன் பிராசாரத்தை ஆரம்பிக்கவேயில்லை. உங்க எதிர்ப்புகளால் அவர் ஆதரவு பிராசரத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
இன்னார்தான் முதல்வராக தகுதி உள்ளவர் என்று யாரால் சொல்ல இயலும். எட்டி உதைத்தும் கிள்ளியும் மேலே விழுந்தும் புரட்சி தலைவர்
இறுதிஊர்வலத்தில் ஜெயல்லிதாவை அரசியலாளர்கள் படுத்தியபாடு…உலகம் அறியுமே சிங்காசனம் ஏறினாரே. எவர் சூழ்ச்சி தடுக்க முடிந்தது. பத்திரிகைகள் அவருக்கு எதிராக இருந்தன. எல்லாம் ஒடிந்து போயிற்று.
அளவுக்கு மீறிய கேலி உங்கள் ஆத்திரத்தைக் காட்டும். ஆத்திரக்கார்ரை மக்கள் மதிப்பதில்லை.
கோபம் வேறு ஆத்திரம் வேறு.
வைகோ பாலிமரை மறுத்து வெளியேறியது கோபம். உங்ககூட மனுஷன் பேசுவானா என்கிற வெளிப்பாடு.
நான் கூட்டணி ஆதரவாளர் இல்லை . பொது ஜனம். என்னைப்போல் பலர் இருக்கக்கூடும். கவனம்!”