chandrakumar
தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ, துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர். வீரப்பன், திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 95 சதவிகித தேமுதிகவினரின் விருப்பப்படி திமுக கூட்டணியில் சேர வேண்டும் எனவும், இதற்காக விஜயகாந்த் தங்களை அழைத்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் விஜயகாந்த் கட்சியில் இருந்து நீக்கினார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீக்கப்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, ‘’தேமுதிகவில் இருந்த நீக்கினாலும், கரை வேட்டியை கழுட்ட மாட்டேன். கேப்டன் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருப்பேன். இன்றைக்கும் தவைவர் கேப்டன்தான். கேப்டனின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்திருந்தால் உங்களையெல்லாம் நாங்கள் அழைத்துப் பேசியிருக்க மாட்டோம். கட்சி முழுக்க முபக்க அண்ணியின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. அவர்தான் வைகோவிடம் பேசி, கேப்டனுக்கு பிடிக்காத ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தலைவருக்கு பிடிக்காத, தலைமை நிர்வாகிகளுக்கு பிடிக்காத, தொண்டர்களுக்கு பிடிக்காத கூட்டணியை உருவாக்கியது மரியாதைக்குரிய அண்ணி அவர்கள்தான். அவர்களால்தான் இந்த இயக்கம் இப்படி சென்றுகொண்டிருக்கிறது. இந்த இயக்கம் மிகப்பெரிய அச்சத்தோடும், தோல்வி அடையக் கூடிய நிலையில் இருக்கிறது.
இன்று சவால் விட்டு சொல்கிறேன். இந்த கூட்டணியோடு (ம.ந.கூ.) சேர்ந்திருக்கிறார் கேப்டன். 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேலே ஒரு தொகுதிலே பெற முடியாது. 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரையும் 25 லட்சம் செலவுசெய்ய வைக்கிறீர்களே. உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்தால் இப்படி அவர்களை பலிகொடுப்பீர்களா. அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்’’என்று கூறினார் சந்திரகுமார்.