ராமண்ணா வியூவ்ஸ்:
a
நீண்ட நாளுக்குப் பிறகு என்னை சந்திக்க வந்தார், நண்பர் கிருஷ்ணன்.  பழங்களை ஏற்றுமதி செய்யும் பிஸினஸ். வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருப்பார். இன்று போன் செய்தவர், மாலையில் சந்திக்கலாம் என்றார்.
“நட்சத்திர ஓட்டல்கள் எதுவும் வேண்டாம். மெரினா போகலாம்” என்று அவர் சொல்ல.. உழைப்பாளர் சிலை அருகே, ஆளுக்கொரு கடலை பொட்டணத்துடன் அமர்ந்தோம்.  பிஸினசில் ஏற்பட்ட சில பல சிக்கல்கள் அதை தீர்த்தவிதம் என்று சுவாரஸ்யமாக சொன்னார்.
ராமண்ணா
ராமண்ணா
அவற்றை இன்னொரு முறை பார்க்கலாம்.  “கேப்டன் கூட்டணி” பற்றி அவர் சொன்னது இது:
மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததால் விஜயகந்துக்குத்தான் லாபம். நான்கு கட்சித் தலைவர்கள், இவரை முதல்வராக ஏற்கிறார்கள். இவரது அரும்பெரும் குணங்களை பரப்புகிறார்கள்.
 
அதோடு, ஓட்டுக்கள் பிரிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றால், தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்படும். ஏனென்றால் முந்தைய சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலிலும் அக் கட்சி பெருந்தோல்வி அடைந்திருக்கிறது. மூன்றாவது தோல்வி என்பது அக் கட்சியை முடக்கிப்போடும்.
 
மீதமிருக்கும் அ.தி.மு.க.வை மட்டும் எதிர்கொண்டால் போதும் என்ற நிலை விஜயகாந்துக்கு ஏற்படும். அதவும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள், அவரது உடல் நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு விஜயகாந்த், தற்போதைய ம.ந.கூ. முடிவை எடுத்திருக்கலாம்.
 
ம.தி.மு.கவைப் பொறுத்தவரை, தி.மு.க.வை தோற்கடித்த திருப்தி இருக்கும். அதற்கான தந்திரமாகத்தான் அவர் ம.ந.கூ.வை நினைக்கிறார்.
ஏனென்றால் தி.மு.கவை வீழ்த்த, அவர் எந்த அளவுக்கும் இறங்குவார்.  கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது,  தந்தைத் தலமையுடன் கருத்து வேறுபட்டு இருந்த மு.க. அழகிரியையே தேடிச் சென்று சந்தித்தவர் வைகோ.
 
மற்றபடி தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்ததால், இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை!” –   அவர் சொல்லி முடித்ததும், “அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா” என்று ஆச்சரியமாக இருந்தது.