அஜீத், விஜய், சுரேஷ் சந்திரா
அஜீத், விஜய், சுரேஷ் சந்திரா

மூகவலைதளங்கில் தரக்குறைவான விமர்சனங்களுக்கு குறைச்சலே இல்லை. அதிலும் அஜித், விஜய் ரசிகர்கள் என்கிற பெயரில் இயங்கும் சிலர் பரஸ்பரம் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுகிறார்கள். அதோடு “எதிர்தரப்பு” படங்களை மோசமாக, கிராபிக்ஸ் செய்து வெளியிடுவதும் நடக்கிறது.

இது குறித்து இன்று ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

அதில் விஜய் ரசிகர்கள் சொல்வதாக சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதன் சாராம்சம்:

“சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்கள் என்கிற போர்வையில்  விஜயையும், ரசிகர்களையும் மோசமாக விமர்சிப்பது நடக்கிறது. சமீபத்தில் வெளியான புலி படத்தையும் மிக மோசமாக விமர்சித்தார்கள்..

இந்த விவகாரத்தின் பின்னணியில் அஜீத்தின் நம்பிக்கையை பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் ஒருவர் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர், அஜீத்தின் மேனேஜர் மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் கொடுத்து இப்படி செய்யச் சொல்கிறார் என்றார்.

சமீபத்தில் அந்தபக்கம் முடக்கப்பட்டது. ஆனால் இரண்டே நாளில்  மீண்டும் அதே பெயரில் வேறு ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து அதிலும் அஜீத் பற்றிய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதைத்தாங்க முடியாமல்தான் காவல்துறையிடம் புகார் அளித்தோம்

இந்த விசயம் பெரிதாவதைத் தெரிந்துகொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு நெஞ்சுவலி  என்று செய்தி போட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்து என் ட்விட்டர் பக்கத்தை யாரோ முறைகேடாக பயன்படுத்தி அந்த செய்தியை வெளியிட்டுவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்” என்று விஜய் ரசிகர்கள் சொன்னதாக ஜூ.வி இதழின் அந்த கட்டுரையில் வெளியாகியிருக்கிறது.

மேலும் அந்த கட்டுரையில், “சமீப காலமாக இதுபோன்ற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை வெளியில் இருந்து பார்த்தால் சாதாரணமாக இருக்கும். ஆனால்  இதனால் பல விளைவுகள் ஏற்படுகின்றன. கோடிகள் புரளும் தொழில் இது. ஒரு படம் சறுக்கினாலும் அந்த நடிகருக்கு மார்க்கெட்டே மாறிவிடும்.  திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொடங்கி அடிமட்ட ஊழயர் வரை பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அஜீத்துக்கு நெஞ்சுவலி என்று அவரது மேனேஜர் சுரேஷ்சந்திராவின் ட்விட்டர் பக்கத்தில்தான் செய்தி வெளியானது. அவர்தான், தனது பக்கத்தில் யாரோ புகுந்து பதிவிட்டுவி்ட்டார்கள் என்று காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆகவே அவர்தான், சமூக வலைதளங்களில் கடுமையாக விஜய்யை விமர்சனம் செய்ய மாதம் 30 ஆயிரம் கொடுப்பதாக அர்த்தமாகிறது.

ஆகவே அவரத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முற்பட்டோம். தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டபோதும் அலைபேசியை எடுக்கவில்லை. பிறகு குறுஞ்செய்தி அனுப்பினேம். அதன் பிறகு எடுத்த நபர், “ என் பெயர் தியாகு. நான் சுரேஷ்சந்திராவின் உதவியாளர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

நாம் விஷயத்தைச் சொல்லி சுரேஷ் சந்திராவிடம் பேச வேண்டும் என்றபோது, “அஜீத்தை திட்டறதால எங்களுக்கு என்ன சார்..  எழுதறவங்க ஏதோ எழுதட்டும்” என்று தொடர்பை துண்டித்தார்.

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவையும் தொடர்புகொண்டு அவரது கருத்தையும் வெளியிடுகிறோம்.

இந்த விவகாரத்தில் இருந்து ஒன்று புரிகிறது. ரசிகர்கள்தான் வேலை வெட்டி இல்லாமல் முட்டிக்கொள்கிறார்கள். நடிகர்கள் மோதிக்கொள்வதன் பின்னணியில் பெரும் பணம் இருக்கிறது. இதை ரசிகர்கள் உணர வேண்டும்.