மும்பை:

1 பில்லியன் ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்யும் பெரும் பணக்காரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான மசோதாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

கடந்த 4 ஆண்டுகளில் வங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடியவர்களையும், நேஷனல் வங்கி முறைகேடு குறித்தும் விசாரிக்கும் வகையிலும் இந்த மசோதா வழி வகுக்கிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்த்தில் விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று, லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகைகளை ஆராயுமாறும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டது.
புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தப்பியோடிய பொருளாதாக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.