வெறுங்கண்ணிற்கே தெரியும் கோள்கள் எவை எவை என்று தெரியுமா?

இரவு நேரத்தில் நாம் காணும் இரவு நேரத்து வானில், புள்ளி புள்ளியாய் தெரியும், நாம் பொதுவாக நட்சத்திரம் என்போம். ஆனால் சிலவற்றில் கோள்களும் உண்டு
ஆனால் உங்களுக்கு தெரியுமா? கீழ்க்காணும் அனைத்துமே நமது வெறுங்கண்ணிற்கே தெரியும்.

1. சூரியன் (இதெல்லாம் ஓவர்!) (-27)

2. நிலா (-13)

3. வெள்ளி (-4.4)

4. வியாழன் (-2.7)

5. செவ்வாய் (-2.0)

6. புதன் (-1.9)

7. சனி (+ 0.7)

சரியாக ஏழும் வந்துவிட்டதா! நம் முன்னோர்கள் அனைத்தையும் வெறுங்கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் Vo என்னும் அளவையாகும். இது பிரகாசத்தை அளக்கும் அளவை (Visual Magnitude). அளவு அதிகமாக அதிகமாக பிரகாசம் குறைவு, கண்ணுக்குத் தெரியாது என்று அர்த்தம். சூரியனின் Vo -27!

ஒரு பைனாகுலர் இருந்தால் போதும். சாதாரண கண்களுக்கு 10 நட்சத்திரங்கள் தெரிந்தால், பைனாகுலர் மூலம் பார்க்கும் போது 50 நட்சத்திரங்கள் வரை தெரியும்! பைனாகுலர் மூலம் பார்த்தால் கீழ்க்கண்ட சூரியக் குடும்ப உறுப்பினர்களைக் காண இயலும்.

கேனிமிடி (Ganymede) – வியாழனின் சந்திரன்

ஐயோ (Io) – வியாழனின் மற்றொரு சந்திரன்

யுரோப்பா – வியாழனின் மற்றொரு சந்திரன்

யுரேனஸ்

காலிஸ்டோ – வியாழனின் மற்றொரு சந்திரன்

நெப்டியூன்

டைட்டன் – சனியின் சந்திரன்

டெலஸ்கோப் இருந்தால் மட்டுமே புளுட்டோவைப் பார்க்க இயலும்.

 

விண்வெளி விந்தைகள் வாரந்தோறும் விரியும்

திரு.இரத்தினகிரி சுப்பையா