லண்டன்:

பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நாட்டை சேர்ந்த ரக்பி பந்து விளையாட்டு வீரர் ஷெப்பர்டு. இவர் சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தார்.

அப்போது தனது பாஸ்போர்ட்டை எடுத்து காலாவதி தேதியை பார்த்தார். பின்னர் பாஸ்போர்ட்டை அங்கிரு ந்த டேபிளில் வைத்துவிட்டு ஷெப்பர்டு வெளியில் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தனது செல்லப் பிராணியான 7 மாத பூட்ஸ் என்ற நாய் அவரது பாஸ்போர்ட்டை கடித்து குதறிவிட்டது. பாஸ்பே £ர்ட்டை மென்று தூள் தூளாக துப்பிவிட்டது.

இதை கண்டு பதறிபோன ஷெப்பர்டு செய்வதறியாது தவித்தார். பின்னர் 8 மணி நேர அலைச்சலுக்கு பிறகு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

இது குறித்து ஷெப்பர்டு கூறுகையில்,‘‘ என்னிடம் 7 வயதுள்ள ஹனி என்ற நாய் உள்ளது. அது பாஸ்போர்ட்டை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இந்த குட்டி பூட்ஸ் அதை கடித்து குதறிவிட்டது. உலகில் உள்ள எல்லா விளையாட்டு பொம்மைகளை கொடுத்தாலும் அது இது போன்று வித்தியாசமாக எதையாவது செய்துவிடுகிறது. அது கெட்ட நாயாக உள்ளது.

சாதாரணமாக புதிய பாஸ்போர்ட் வாங்க 2 வாரங்கள் ஆகும். அதிகாரிகள் எனது சூழ்நிலையை புரிந்து கொண்டு விரைந்து செயல்பட்டு எனக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்கினர்’’ என்றார்.