maha

திருச்செங்கோடு:

மலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம் ஒன்றை விஷ்ணுப்ரியா எழுதியதாகவும், அதில் “என் குடும்பப் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துகொள்கிறேன். டி.எஸ்.பியாக இருக்கும் தகுதி எனக்கு இல்லை.  எனது மரணத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் காவல்துறையினரால் கூறப்படுகிறது.leter new

அவரது தற்கொலைக்கு, “கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததே காரணம்” என்று விஷ்ணுப்ரியா குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

விஷ்ணுப்ரியாவின் தந்தை, “உயரதிகாரிகளின் தொந்தரவால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை உடலை வாங்க மாட்டோம்”  என்று கூறியிருக்கிறார். இது குறித்து உள்துறைச் செயலாளருக்கும் வேண்டுகோள் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே, “கோகுல்ராஜ் வழக்கில் சம்மந்தமில்லாதவர்கள் மீதெல்லாம் வழக்குப்போட்டு குண்டர்சட்டத்தில் அடைக்கும்படி டிஐஜி, எஸ்.பி கொடுத்த நெருக்கடியே விஷ்ணுப்ரியாவின் தற்கொலைக்கு காரணம்”  என்று அவரது தோழியும்  கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.