natham-ops
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் அதிமுக தலைமையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வைகோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதுபோலவே பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும் அதிமுகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் ஜெயலலிதாவை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இதையடுத்து இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர்.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளூடன் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாக கட்டி வட்டத்தில் இருந்து கூறப்பட்டாலும், இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற பேச்சு விஸ்வரூபம் எடுத்துவருவதை உணர்ந்து, வெளியே வந்து தலைகாட்டிவிட்டு செல்லுங்கள் என்று அதிமுக தலைமை கட்டளையிட்டதால்தான் அதிமுகவின் அலுவலகத்திற்கு இருவரின் திடீர் வருகை இருந்தது என்றும் கூறப்படுகிறது.