ra
மீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.
முன்யோசனை இன்றி புழல் ஏரியைத் திறந்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதும் மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் நீர் ஆதாரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனங்களே இதற்கு முக்கிய காரணம்.
ஆம்… . சென்னையை சுற்றியுள்ள இயற்கை நீர் சேகரிப்பு ஆதாரங்களை பல தனியார் கல்வி நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஆக்ரமித்திருப்பதே இந்த பாதிப்புக்கு காரணம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தலா நூறு ஏக்கர் நிலங்களை ஆக்ரமித்துள்ளது.
இந்த மழை நீர் சேகரிப்பு ஆதாரங்களை மீட்க, சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ள நிலங்களை அடையாளம் காண நீதி விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் உத்தரவிட வேண்டும்.
இந்த  கோரிக்கையை வலியுறுத்தும் மனு இது. நீங்களும் இந்த மனுவில் அவசியம் கையெழுத்திடுங்கள்.
சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ள நிலங்களை மீட்டு, மீண்டும் இயற்கை நீர சேகரிப்பு மற்றும் நீர் பிடிமான பகுதியாக சென்னையை உருவாக்குவோம்.
மனுவின் தொடுப்பு…
https://www.change.org/p/chief-justice-chennai-highcourt-chief-minister-of-tamil-nadu-evict-the-institutions-illegally-occupying-the-former-lake-lands-in-and-around-chennai?recruiter=69877950&utm_source=share_petition&utm_medium=facebook&utm_campaign=fb_send_dialog