ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ பாம்பனையப்பன் திருக்கோவில்.

மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ கமலநாதர்.

திருவண்வண்டூர் திவ்யதேசம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

உற்சவர் :-

ஸ்ரீ கோசாலா கிருஷ்ணா.

தீர்த்தம் :-

பம்பை தீர்த்தம்.

விமானம் :-

“வேதாலய விமானம்” எனும் அமைப்பைச் சேர்ந்தது.

திருவண்வண்டூர் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள் :-

பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலன் கோவில் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது.

இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது.

நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.