ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது.  இன்று (செப்டம்பர் 1ந்தேதி)   காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,56,32,203 ஆக உயர்ந்துள்ளது.

உலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்,குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,79,37,062 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  8,54,685 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது.   அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,211,796ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 187,736 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து 2வது இடத்தில்  பிரேசில் நாடு இருந்து வருகிறது.  அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,910,901ஆக உள்ளது.   இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக  121,515பேர் உயிரிழந்து உள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது.  இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,687,939ஆக  உள்ளது.  இதுவரை 65,435 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,837,377 பேர் குணமடைந்து உள்ளனர்.