01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை   7,81,915 ஆக உயர்ந்துள்ளது.  தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில்398 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு  2,15,360 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று மட்டும் 3 பேர் உயிர் இழந்ததையடுத்து,  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  3,850ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல நேற்றும் 386 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  2,07,761 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 3,749 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 10,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 374 பேர்

அண்ணா நகர் – 379 பேர்

தேனாம்பேட்டை – 353 பேர்

தண்டையார்பேட்டை – 206 பேர்

ராயபுரம் – 229 பேர்

அடையாறு- 416 பேர்

திரு.வி.க. நகர்- 366 பேர்

வளசரவாக்கம்- 318 பேர்

அம்பத்தூர்- 306 பேர்

திருவொற்றியூர்- 88 பேர்

மாதவரம்- 191 பேர்

ஆலந்தூர்- 157 பேர்

பெருங்குடி- 170 பேர்

சோழிங்கநல்லூர்- 90 பேர்

மணலியில் – 57 பேர்.