900 ஆண்டுகள் கழித்து உலகில் ஒரு ஆச்சர்யம்: இந்த நூற்றாண்டின் அதிசய தேதியானது 02.02.2020

டெல்லி: 900 ஆண்டுகள் கழித்து, 02.02.2020 என்ற இன்றைய தேதி, பாலிண்ட்ரோம் வகையின் கீழ் அதிசயிக்கத்தக்க ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தினம் உலகளவில் தனித்துவமிக்க நாளாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. 02.02.2020 என்ற இந்த தினம் பாலிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது, வலது, இடது என்று எப்படி எழுதினாலும் ஒரே மாதிரியாக தான் காணப்படும். இதற்கு முன்னதாக பாலிண்டரோம் தேதியாக இருந்தது 11.11.1111 ஆகும். 900 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று நடந்ததாக போர்ட்லேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர் அஜிஸ் இனான் தெரிவித்துள்ளார்.

இந்த 02.02.2020 என்ற தினத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. அதாவது, இது சர்வதேச அளவிலும் உற்று நோக்கப்படுகிறது. நீங்கள் தேதியை அமெரிக்க வரிசையில், நாள்,மாதம், ஆண்டு  அல்லது பல நாடுகளில், மாதம், நாள், ஆண்டு என எழுதினாலும், அதே கலவையாக அப்படியே தான் வரும்.

இது போன்ற மற்றொரு பாலிண்ட்ரோம்,101 ஆண்டுகளுக்கு வராது. 12-12-2121 என்ற நாளில் பாலிண்ட்ரோம் தேதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.