சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக 02/05/2020 நிலவரம்..

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது.  குறிப்பாக சென்னையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் 176 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை  1082 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 16 மண்டலங்களிலும் கொரோனா தொற்று விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும், தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும், அண்ணாநகரில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி