03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை  98,392 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  62,598 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில்,  சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி  ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி