02/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதிகரித்து வரும் உயிரிழப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94,049 ஆக உயர்ந்ததுள்ளது. இதுவரை உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்திருக்கின்றது

சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533ஆக உயர்ந்ததுள்ளது. மேலும் இதவரை 929 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 24 பேர் மரணத்தை தழுவி உள்ளது தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலான இடைப்பட்ட 16 மணி நேரத்தில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  9 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேரும், கேஎம்சியில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி