02/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று  ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில்,  5,962 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 5,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 063 ஆக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், இன்று ஒரேநாளில் 98 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,516 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 154 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 75,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 49 லட்சத்து 64 ஆயிரத்து 141 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன.

அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,025  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தால் இதுவரை 1,37,732 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மாவட்டமும் இல்லாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :

அரியலூர் – 43,

செங்கல்பட்டு – 390,

சென்னை – 1,025,

கோவை – 579,

கடலூர் –  405,

தர்மபுரி – 54,

திண்டுக்கல் – 136,

ஈரோடு – 106,

க.குறிச்சி – 54,

காஞ்சிபுரம் – 133,

குமரி – 111,

கரூர் – 64,

கிருஷ்ணகிரி -49,

மதுரை – 123,

நாகை – 71,

நாமக்கல் – 83,

நீலகிரி- 14,

பெரம்பலூர்- 10,

புதுக்கோட்டை- 76,

ராமநாதபுரம்- 57,

ராணிப்பேட்டை- 98,

சேலம்-  403,

சிவகங்கை- 25,

தென்காசி- 82,

தஞ்சை-147,

தேனி-  95,

திருப்பத்தூர்-  94,

திருவள்ளூர்- 285,

தி.மலை- 213,

திருவாரூர்- 133,

தூத்துக்குடி- 57,

நெல்லை- 110,

திருப்பூர்- 87,

திருச்சி-  120,

வேலூர் – 159,

விழுப்புரம்- 224,

விருதுநகர் – 62.