சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி மண்டல வாரிப் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று (2ந்தேதி)  ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு  24,586 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று  கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 13,706 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 02.06.2020  வரை, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 51.7% பேர் (8,506) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 0.8% ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை  3 ஆயிரத்தை தாண்டியது.  ராயபுரத்தில் 3,060 ஆக உயர்ந்துள்ள நிலையில், தண்டையார்பேட்டையில் 2,007 ஆகவும் உயர்ந்துள்ளது.  கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,921 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2,007 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,871 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,711 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,411 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.