சென்னை: தமிழகத்தில் இன்று 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும்  கொரோனாவில் இருந்து இதுவரை 3,86,173 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இன்று மட்டும் 6,110 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,070 பேர் தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி  இன்று மட்டும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 58 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,608 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,23,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,059 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 29 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,814
ஆக உள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா மொத்த பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னையில்  1,38,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 17,258 பேருக்கும், திண்டுக்கல்லில் 6,939 பேருக்கும் திருநெல்வேலியில் 9,959 பேருக்கும், ஈரோட்டில் 3,475, திருச்சியில் 7,799 பேருக்கும், நாமக்கல் 2,355 மற்றும் ராணிப்பேட்டை 10,949, செங்கல்பட்டு 27,286, மதுரை 14,455, கரூர் 1,714, தேனி 12,910 மற்றும் திருவள்ளூரில் 25,563 பேருக்கு, தூத்துக்குடி யில் 11,587, விழுப்புரத்தில் 7,971 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2,322 பேருக்கும், திருவண்ணா மலையில் 10,974, தருமபுரியில் 1,330 பேருக்கும், திருப்பூரில் 3,018, கடலூர் 12,737, மற்றும் சேலத்தில் 12,043, திருவாரூரில் 3,898, நாகப்பட்டினம் 2,912, திருப்பத்தூர் 3,067, கன்னியாகுமரியில் 9,913 மற்றும் காஞ்சிபுரத்தில் 17,818 பேருக்கும், சிவகங்கை 4,145 மற்றும் வேலூரில் 11,217 பேருக்கும், நீலகிரியில் 1,720 பேருக்கும், தென்காசி 5,606, கள்ளக்குறிச்சியில் 6,464 பேருக்கும், தஞ்சையில் 7,026, விருதுநகரில் 12,970, ராமநாதபுரத்தில் 4,889 பேருக்கும், அரியலூர் 2,909 மற்றும் பெரம்பலூரில் 1,368 பேருக்கும், புதுக்கோட்டையில் 6,350 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.