சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து  36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில்  நேற்று  இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  அவர்களில் 184 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,30,131 பேர் விடுபட்டுள்ள நிலையில், 4,157 பேர் மரணத்தை தழுவி உள்ளனர்.  நேற்று மட்டும் 10,212 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தற்போது வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,784 பேர் (நேற்றைய எண்ணிக்கை 1,771 பேர்) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது. சென்னையில் இதுவரை 4,157 பேர் (நேற்றைய எண்ணிக்கை 4,156 பேர்) கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகியிருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து தொற்று பாதிப்பு  1784 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் இன்று 1,784 பேர் (நேற்றைய எண்ணிக்கை 1,771 பேர்) கொரோன வைரஸ் நோய் தடுப்புக்கான மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக சிகிச் பெறுவோர் எண்ணிக்கை:

சென்னையின் 15 மண்டலங்களில்.  அம்பத்தூரில் 169 பேர், தேனாம்பேட்டையில் 176 பேர்,  மணலியில் 13 பேரும்,  திருவொற்றியூரில் 30 பேரும், சோழிங்கநல்லூரில் 52 பேரும், திரு.வி.க. நகரில் 124 பேரும், வளசரவாக்கத்தில் 107 பேரும்,இஅண்ணாநகரில் 175 பேரும், தேனாம்பேட்டையில் 176 பேரும்,, கோடம்பாக்கத்தில் 214 பேரும்,. அடையாறில் 192 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.