சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 5,063  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாவட்டம் வாரியாக கொரோனாபாதிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 5063 பேரில், 5035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்,  26 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளது.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த 26 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று ஒரே நாளில் 55,122 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 27,86,250 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3041 பேர் ஆண்கள், 2022 பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால்  பாதிக்கப் பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 52,955 பேருக்கு செய்யப்பட்டுள்ள தால் மொத்தம் 27,86,250 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழக்தில் தற்போது வரை 55,152பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 6ஆவது நாளாக பாதிப்பு 6000க்கும் கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.