சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டிய  நிலையில், சென்னையில் தொற்று பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.  தற்போதைய நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,384 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 2,01,848 ஆக உள்ளது. தற்போதைய நிலையில், 6,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று  குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 91 ஆயிரத்து 787 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 677  ஆக உயர்நதுள்ளது.

 மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 465

அண்ணா நகர் – 502

தேனாம்பேட்டை – 367

தண்டையார்பேட்டை – 241

ராயபுரம் – 309

அடையாறு- 348

திரு.வி.க. நகர்- 420

வளசரவாக்கம்- 241

அம்பத்தூர்- 321

திருவொற்றியூர்- 135

மாதவரம்- 157

ஆலந்தூர்- 194

பெருங்குடி- 191

சோழிங்கநல்லூர்- 90

மணலி – 92