05/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  6,19,996 ஆக உயர்நதுள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1,72,773  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த வாரம் சென்னையில் தொற்று பாதிப்பு 0.5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், தற்போது, மேலும் பாதிப்பு அதிகரித்து, 2.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும்,  தடை செய்யப்பட்ட பகுதிகள் 10 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தற்போதைய நிலையில், 12,283 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,.72,773 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 3,274 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 1,57,216 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும்  13.526 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 60.52 சதவிகிதம் பேர் ஆண்கள் என்றும், 39.48 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் மாநகராட்சி அறிவித்து உள்ளது.