டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்துள்ளது.  அதுபோல,  நேற்று ஒரே நாளில் மேலும் 512 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,39,700 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.

அதுபோல,  கடந்த 24 மணி நேரத்தில்  42,533 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,58,822 ஆக உயர்ந்துள்ளது. இது : இதுவரை 94.20% ஆகும்.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்  4,09,689 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.35% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 11,57,763 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14,58,85,512 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,391 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும்  69,903 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,20,41,933 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக  சென்னையில் 356 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,867 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 139 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று கொரோனா குணமடைந்து 1,426 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,64,854 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 10,938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 8 பேர், அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,762 ஆக அதிகரித்துள்ளது.