06/07/ 2020: சென்னையில் மண்டலவாரியாக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் பட்டியல்..

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது.  அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68, 254 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24, 980 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 42,309 ஆகவும் உள்ளது. இதுவரை கொரோனா நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1054 ஆக அதிகரித்துள்ளது.

 மண்டலம் வாரியாக விவரம்:

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,920ஆக உயர்ந்துள்ளது.

கோடம்பாக்கம்- 7,370 பேர் திருவிக நகர்-5,543 பேர், வளசரவாக்கம்- 3,212பேர் அண்ணாநகரில் 7,504 பேர் தண்டையார்பேட்டை 7,574 பேர், தேனாம்பேட்டை 7,630பேர், திருவொற்றியூர் 2,653 பெருக்கும், மணலி 1,222 பெருக்கும் அம்பத்தூர் 3,104 பெருக்கும் கொரோனா பாதிப்பு.

மேலும் மாதவரம் 2,211 பேர், ஆலந்தூர் 1,815, அடையாறு 4,274 பெருங்குடி 1,785 பேர் சோழிங்கநல்லூர் 1,458 பெருக்கும் கொரோனோ பாதிப்பு உள்ளது.

கார்ட்டூன் கேலரி