07/01/2020:  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.. ராயபுரத்தில் 8ஆயிரத்தை கடந்தது…

சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 8,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை  34,828 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 22,610 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில்  பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 8,089ஆக உயர்ந்துள்ளது.   அண்ணாநகரில் இதுவரை 6,355 பேர், மேலும் தண்டையார்பேட்டை -6,637 பேர், தேனாம்பேட்டை- 6,547பேர், கோடம்பாக்கம்- 6,173 பேர், திருவிக நகர்- 4,833பேர், வளசரவாக்கம்- 2,724பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் -> +56 (3% up)  மணலி -> +42 (4% up) மாதவரம் -> +53 (3% up) தண்டையார்பேட்டை -> +98 (1% up)  ராயபுரம் -> +208 (3% up) திருவிக நகர் -> +167 (4% up) அம்பத்தூர் -> +157 (7% up) அண்ணா நகர் -> +322 (5% up)  தேனாம்பேட்டை -> +352 (6% up)  கோடம்பாக்கம் -> +346 (6% up) வளசரவாக்கம்-> +123 (5% up) ஆலந்தூர் -> +66 (5% up) அடையாறு -> +177 (5% up) P பெருங்குடி -> +166 (13% up) சோளிங்கநல்லூர் -> +25 (2% up)

கார்ட்டூன் கேலரி