07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்று 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ள தாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை  கொரோனாவில் பேர் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,27,575 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84% குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 984 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,690ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 853 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 677 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,14,931-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை- 984

திருவள்ளூர்- 388

தேனி- 351

செங்கல்பட்டு- 319

ராணிப்பேட்டை- 253

தி.மலை – 252

கோவை – 228

தஞ்சை-217

கடலூர்- 212

நெல்லை- 200

தூத்துக்குடி-195

குமரி – 187

புதுக்கோட்டை- 173

சேலம்-168

காஞ்சிபுரம்- 166

வேலூர் -158

க.குறிச்சி-139

திண்டுக்கல்-134

தென்காசி-117

மதுரை-109

திருச்சி-105

விருதுநகர்-101

நாகை-78

விழுப்புரம்-73

பெரம்பலூர்-69

ஈரோடு-67

திருப்பத்தூர்-66

சிவகங்கை-64

அரியலூர்-51

கிருஷ்ணகிரி- 46

திருவாரூர்- 44

ராமநாதபுரம்- 43

நாமக்கல்- 34

திருப்பூர்- 31

கரூர்-26

தர்மபுரி – 16

நீலகிரி – 13

 

 

கார்ட்டூன் கேலரி