ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து  இந்தியா, பிரேசில் உள்பட பல நாடுகளில் தொற்றின் வேகம் தீவிரமாகி உள்ளது.

இன்று காலை 07/09/2020 6.30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,72,88,426 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  8,87,538 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போதைய நிலையில், தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,93,70,07 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  8,87,538 ஆக அதிகரித்து உள்ளது.

உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.   அங்கு  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,460,250 ஆகவும்,  பலியானோர் எண்ணிக்கை   193,250 ஆக உள்ளது.  இதுவரை 3,725,970 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,541,030 ஆக உள்ளது.

2வது இடத்தில் இந்தியா உள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 80ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உலக அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,202,562ஆக  உள்ளது.  இதுவரை 71,687 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 3,247,297 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 883,578 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,137,606 ஆகவும்,  இதுவரை 126,686 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,317,227 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 693,693 ஆக உள்ளது.