சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்நத்ள்ளது.   நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக சென்னையில், 1,75,484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு  6,30,408 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை .9917 பேர் பலியான நிலையில், இதுவரை 5,75,212 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில், நேற்று  1306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால்,  சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,75,484 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  3,318 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 1,59,237 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 12,929 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும்  13,775 பேருக்கு  சோதனை நடைபெற்றுள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,75,484 ஆக உள்ளது. 12,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன் விவரம் :-  கோடம்பாக்கம் – 1,355 பேர், அண்ணா நகர் – 1,353 பேர், தேனாம்பேட்டை – 1,276 பேர், தண்டையார்பேட்டை – 914 பேர், ராயபுரம் – 960 பேர், அடையாறு- 1,062 பேர், திரு.வி.க. நகர்- 1,110 பேர், வளசரவாக்கம்- 854 பேர், அம்பத்தூர்- 913 பேர், திருவொற்றியூர்- 372 பேர், மாதவரம்- 549 பேர், ஆலந்தூர்- 673 பேர், பெருங்குடி- 533 பேர், சோழிங்கநல்லூர்- 324 பேர், மணலி- 262 பேர்.