சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரிப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்று  1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 71,220 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 47,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 22,374  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1120-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில்  ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வந்தது. பின்னர் அனைத்து மண்டலங்களிலும் தொற்று பரவியது.  கடந்த இரு நாட்களாக சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

மண்டலம் வாரியாக விவரம்:
1. திருவொற்றியூா் 9992. மணலி 4963. மாதவரம் 8294. தண்டையாா்பேட்டை 1,6905. ராயபுரம் 1,9646. திரு.வி.க. நகா் 1,7797. அம்பத்தூா் 1,2218. அண்ணா நகா் 2,4329. தேனாம்பேட்டை 2,16310. கோடம்பாக்கம் 2,56911. வளசரவாக்கம் 1,14812. ஆலந்தூா் 95113. அடையாறு 1,47914. பெருங்குடி 88215. சோழிங்கநல்லூா் 522″