இன்று 5,684 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,74,940 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக  5,684 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு   4,74,940 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளதால், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,43,602  ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,599 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது. இது 87,74% சதவிகிதமாகும்.

இன்று மட்டும் 87 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை  8,012 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும்   83,266 சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை  54,62,277 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் – 163 (64 அரசு + 99 தனியார்)